வேலூர்'இல் இருந்து புதுசா பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டைக்கு போனா நீங்க மிஸ் பண்ணாம போகவேண்டிய இடங்கள் இதுதான்.
வேலூர் அல்லது ராணிப்பேட்டை என்றாலே அய்யயோ அந்த ஊரா ரொம்ப பயங்கரமான வெப்பம் இருக்கும் ஊர் ஆச்சே என்பார்கள். காரணம் வெயில் காலத்தில் மட்டுமே நாம் அந்த ஊரை பற்றி கேள்வி படுவது தான்.
மழை காலத்துல அந்த ஊரு எப்டி இருக்கும் தெரியுமா? சும்மா சிலாக்ஸ் ஆக மாறிடும்.
ஸ்ரீ காஞ்சனகிரி மலை
ராணிப்பேட்டை பேருந்து நிலையத்துல இருந்து ஒரு 18கிமீ தூரத்துல கால்மேல்க்குப்பம் என்கிற இடத்துலதான் இருக்கு காஞ்சனகிரி மலை.
குளிர் காலத்துல நீங்க அங்க பயணிக்குறப்போ ஒரு குட்டி மூணார், ஊட்டிக்கு போனமாறி ஒரு உணர்வு கிடைக்கும். அந்த மலைய சுலபமாவே வாகனங்கள்ள பயணம் செஞ்சு போய்டலாம் பெரிய அளவுல உங்களுக்கு நேரம் எடுத்துக்காது.
மலைக்கு போன உடனே அங்கு முருகன், ஆஞ்சிநேயர், காஞ்சனேஸ்வரர், ஐயப்பன் ஆலயம் சென்று நீங்க தரிசிக்கலாம். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை அங்க ஸ்வாமி தரிசனம் கிடைக்கும்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 1500 அடி மேல் இருக்கும் ஸ்ரீ காஞ்சனகிரி மலையில் நீங்க அதிசய பாறை பார்க்கலாம்.
மணி பாறை
இசை எங்க இருந்து வருது தெரியுமா என்ற காமெடியில் கொத்துற கல்லில் இருந்தும் வரும் என்ற ஒரு வசனம் வரும், அதுபோல பாறையில் இருந்து இசை பிறக்கிறது மணி பாறையில்.
அந்த பாறையை ஒரு கல்லை வைத்து தட்டினால் அதில் பெல் சவுண்ட் (மணி ஒலி) கேர்க்கும். அதனாலயே அதற்கு மணி பாறை என்ற பெயர் வந்தது. சில மன்னர் காலத்து கோவில் தூண்களை தட்டினால் ஏழு ஸ்வரம் சத்தமும் கேட்கும் என்று கேள்விப்பட்ருப்போம், ஒரு வேல அதெல்லாம் இந்த மாறி மணி பாறைகளை கொண்டு கட்டிய்யதாகக்குட இருக்கலாம்.
கோவில் தரிசனம் முடிச்சுட்டு நீங்க நல்லா ஓய்வு எடுக்கணும்னு நினைக்கும் பட்சத்தில் ராணிப்பேட்டைல ஏகப்பட்ட பெரம்பூ மரச்சாமான்கள் கிடைக்கும்.
பெரம்பூ மரச்சாமங்கள்
மற்ற ஊர்களை விட சிறிது விலை மளிவாகவே கிடைக்கும், ராணிப்பேட்டைல இருக்க வாலாஜாப்பேட்டைக்கு போன அங்க ஏராளமான பெரம்பூ மரச்சாமான் கடைய நீங்க பார்க்கலாம். மிக அழகான ஆரோக்கியமான நாற்காலிகள், ஊஞ்சல்கள்லாம் பார்த்தவுடனே வாங்கணும்னு ஆசையை தூண்டும்.
இவ்ளோ நேரம் ஆகியும் சாப்பாட்டுக்கு எங்க போறதுனு தேடிட்டு இருந்திங்கன்னா இதோ சொல்றேன்.
ராணிப்பேட்டைல இருந்து நீங்க வாலாஜாப்பேட்டை ரயில் நிலையத்துல இருந்து உங்க ஊருக்கு போக நினச்சா மறக்காம அங்க ஒரே ஒரு சின்ன சைவ உணவகம் இருக்கும். அங்க வேலை செய்றவங்க பூராவே பெண்கள்தான். உணவகத்துல பெரும்பாலும் ஆண் மாஸ்டர், ஆண் சர்வர்தான் பார்த்துருப்போம், ஆனா அங்க எல்லா வேலையய்யும் பெண்கள் இழுது போட்டு செய்வாங்க.
நீங்க சாப்பிட்டு முடிச்ச உடன் ரயில் பயணம் மேற்கொள்றதுக்கு முன்னாடி ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோங்க. வாலாஜாப்பேட்டை ரயில் நிலையம் ஒரு வரலாறு சிறப்பு மிக்க ரயில் நிலையம். தெற்கு ரயில்வே 1856 ஆம் ஆண்டு தன் முதல் ரயில்வே ட்ராக் சென்னை ராயபுரம் முதல் வேலூர் வாலாஜாபேட்டை வரைதான் அமைச்சாங்க, இந்தியாவின் பழமையான ரயில் நிலையங்களிலேயே இன்னும் செயலில் இருப்பது வாலாஜாப்பேட்டை ரயில் நிலையம் தான்.
இன்னும் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை பற்றிய தகவல்களை அடுத்த கட்டுரையில் சொல்றேன்.
அடுத்த முறை நான் ராணிப்பேட்டை செல்லும்போது கண்டிப்பாக இந்த இடங்களை நான் பார்க்க செல்கிறேன்
ReplyDeleteநன்றி 🙏
Delete